Actress Mirnalini Ravi About Bigg Boss

முதல் சீசனில் இருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க அழைப்பு வருவதாகவும் ஆனால் தான் கலந்து கொள்ள விரும்பவில்லை என பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

Actress Mirnalini Ravi About Bigg Boss : டிக் டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி பின்னர் கோலிவுட்டில் இடம் பிடித்திருப்பவர் மிர்ளாயிணி ரவி. இவர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

முதல் படமான இந்தப் படத்திலேயே அவருடைய நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இதனையடுத்து தற்போது சமுத்திரகனி மற்றும் சசிகுமார் இணைந்து நடித்துள்ள எம்ஜிஆர் மகன் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தினை இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார். படம் ஏப்ரல் 23ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் மிருணாளினி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது முதல் சீசனில் இருந்து தன்னை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைத்து வருகிறார்கள். நான் தான் வேண்டாம் என்று உறுதியாக இருந்து வருகிறேன். பார்வையாளர்களில் ஒருவர் ஆக இந்த நிகழ்ச்சியை பார்க்க விரும்புகிறேன். பூட்டிய வீட்டில் குறிப்பிட்ட சிலருடன் என்னால் இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.