Actress Meera Mitun Open Talk About Kamal Haasan
தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் மீரா மிதுன். இவர் தன்னுடைய விளம்பரத்திற்காக கடந்த சில மாதங்களாக நடிகர் சூர்யா, நடிகர் விஜய் ஆகியோரை விமர்சனம் செய்து வம்பிழுத்து வருகிறார்.
இதனால் தொடர்ந்து மீரா மிதுனுக்கும் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.ஆனால் மீராமிதுன் விஜய், சூர்யா ரசிகர்கள் மோதல் தற்போது மக்களுக்கு சலித்துப் போய்விட்டது. மீரா மிதுனின் பதிவுகளை யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை.
இப்படியான நிலையில் தற்போது பரபரப்பான டாப்பிக்காக மாறி இருக்கும் பிக்பாஸ் குறித்து பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் மீரா.அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டபோது சேரன் தன் இடுப்பில் கைவைத்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
தற்போது அதே புகைப்படத்தை வெளியிட்டு தனக்கு நீதி கிடைக்க வேண்டும். நான் பிக் பாஸ் சீசன் நான்கை நடத்த விட மாட்டேன் என சபதம் மேற்கொண்டுள்ளார்.
இவருடைய இந்தப்பதிவு வழக்கம்போல் ரசிகர் மத்தியில் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.சேரனின் ஆதரவாளர்கள் மீராமிதுன்-ஐ வச்சி செய்து வருகின்றனர்.