ஹீரோ தீபக்கை விட குறைவான வயது தான் இருந்தாலும் தீபக்கிற்கு அம்மாவாக நடித்து வருகிறார் மீரா கிருஷ்ணா.

Actress Meera Krishna Age Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் ஹீரோவாக தொகுப்பாளர் தீபக் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பாக திருமதி செல்வம், தென்றல் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து இருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக தொகுப்பாளினி நட்சத்திரா நடிக்கிறார். தற்போது விஷயம் என்னவென்றால் இந்த சீரியலில் தீபக்கின் அம்மாவாக கோதைநாயகி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மீரா கிருஷ்ணா.

அம்மா வேடத்தில் நடித்து வரும் இவருக்கு இந்த சீரியல் நாயகன் தீபக் கைவிட வயது குறைவு என்றால் நம்ப முடிகிறதா. ஆனால் அதுதான் உண்மை. ஹீரோவாக நடித்து வரும் தீபக்கிற்கு தற்போது 42 வயதாகிறது. இவர் 1979-ம் ஆண்டில் பிறந்தார்.

ஸ்ரீ ரமணர் உபதேசித்த மோட்ச மந்திரம் கேளாயோ.!

இந்த சீரியலில் அம்மாவாக நடித்து வரும் மீரா கிருஷ்ணாவுக்கு தற்போது வயது முப்பத்தி நான்கு தான். இவர் 1987 ஆம் ஆண்டு பிறந்தார். தற்போது இவர் பிரபல ஹீரோ ஸ்ரீகாந்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி கால ஹீரோ என குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் இவருடைய வயது என்ன என்று தேடி வருகின்றனர்.

நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் – Director SS Rajamouli Press Meet | RRR Movie Press Meet