
சிம்பு மற்றும் தனுஷ் இருவரில் யார் நல்ல நடிகர் என்ற கேள்விக்கு நடிகை மீனா சாமர்த்தியமாக பதில் அளித்துள்ளார்.
Actress Meena Chat With Fans : தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். தற்போதும் கூட தொடர்ந்து பல படங்களில் நடிக்கிறார்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் கூறியுள்ளார். சர்ச்சையான கேள்விகளுக்கும் அவர் சாமர்த்தியமாக பதில் அளித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் நல்ல நடிகர் என நீங்கள் நினைக்கிறீர்கள் என ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு இருவரும்தான் என்று சாமர்த்தியமாக பதில் அளித்துள்ளார்.
“Vikram” படத்தில் இணைந்த பிரபலம் லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு.! | Kamal Haasan | Lokesh Kanagaraj | HD
அதேபோல் பாபநாசம் 2 படத்தில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு அதை கமலிடம் கேளுங்கள் என தெரிவித்துள்ளார். மேலும் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என கேட்ட ரசிகருக்கு தன்னுடைய திருமண புகைப்படத்தை வெளியிட்டு நீங்க லேட் என வேடிக்கையாக பதிலளித்துள்ளார்.
மேலும் இன்னொரு ரசிகர் உங்களது வயது என்ன எனக் கேட்டதற்கு பெண்களிடம் வயது என்ன என கேட்பது அநாகரிகமான செயல் என கூறியுள்ளார்.