மார்க்கெட்டில் உச்சம் பெற்றிருந்தாலும் இதுவரை அஜித்துடன் ஜோடி சேராத நாயகிகள் குறித்து பார்க்கலாம் வாங்க.

Actress List of Who Didn’t Pair With Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார்.

திரைப்பட நடிகைகளுக்கான பிரத்யேக விருது வழங்கும் விழா | JFW Awards | Part – 5 | Jaya TV

பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் கொரானா வைரஸின் தீவிர பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புரோ கபடி லீக் : புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது, எந்த அணி தெரியுமா?

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்து வரும் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது பல நடிகைகளின் கனவாகவே இருந்து வருகிறது. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் உச்சம் பெற்று இருந்தாலும் இதுவரை அஜித்துடன் இரண்டு நடிகைகளால் இணைந்து நடிக்க முடியாமல் இருந்து வருகிறது.

அவர்கள் வேறு யாரும் இல்லை நடிகை சமந்தாவும் கீர்த்தி சுரேஷூம் தான். சமந்தா தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்ட போதிலும் அஜித்துடன் இணைந்து நடிக்க அவருக்கு வாய்ப்பு அமையவில்லை.

அதேபோல் கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட தளபதி விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ், விக்ரம், சூர்யா என பல நடிகர்களோடு இணைந்து நடித்து விட்டார். இவருக்கும் அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தற்போது வரை அமையவில்லை.

மேலும் பிரபல நடிகையாக வலம் வந்த ஹன்சிகா விஜய், சூர்யா தனுஷ் சிவகார்த்திகேயன் என பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்தாலும் அவரும் அஜித்துடன் ஜோடி சேர முடியவில்லை.