
நடிகை லைலாவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி வருகின்றன.
தமிழ் சினிமாவில் தல அஜித்துடன் தீனா, சூர்யாவுடன் மௌனம் பேசியதே, நந்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்தவர் லைலா.
வாய்ப்புகள் குறைந்து திரையுலகை விட்டு வெளியேறிய அவரை ரசிகர்கள் படங்களில் பார்த்தே சுமார் 10 வருடங்களுக்கு மேலாகி விட்டது.
இந்நிலையில் தற்போது லைலா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நடிகர் நகுலுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படங்களில் லைலாவின் உடை கொஞ்சம் கவர்ச்சியாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

