Actress Kushboo Reply to Fans
Actress Kushboo Reply to Fans

சுசுபு ஆன்ட்டி இன்னும் விக் வைக்கிறதை விடலையா என கலாய்த்தவருக்கு குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

Actress Kushboo Reply to Fans : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் குஷ்பு. இவர் தற்போது சின்னத்திரை சீரியல் மற்றும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

நயன்தாரா அம்மனா? விவஸ்த்தையே இல்ல.. கிண்டலடித்த நடிகருக்கு ஆர்.ஜே பாலாஜி கொடுத்த தரமான பதிலடி – புகைப்படங்களுடன் இதோ

மேலும் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் வீடியோ ஒன்றில் புலம்பெயர் தொழிலாளர்கள் படும் கஷ்டத்தை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோவில் குஷ்பு முடியை விரித்து வைத்துக் கொண்டு பேசினார். இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர் சுசுபு ஆன்ட்டி இன்னும் நீங்க விக் வைக்கிறத விடலையா என கிண்டல் அடித்திருந்தார்.

ரசிகரின் இந்த கிண்டலான பதிவுக்கு குஷ்புவும் தன்னுடைய பதிலடியை பதிவு செய்துள்ளார். அதாவது உனக்கு என் முடியின் மீது பொறாமை. தலையில்லா முண்டம் நீ உன் முகத்தையும் உண்மையான பெயரையும் தைரியமாக வெளிக்காட்டு என பதிலடி கூறியிருந்தார்.

அதேபோல் இன்னொரு ரசிகர் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி பேசியது கண்ணீரை வரவழைத்து விட்டது. ஆனால் இதனை பேசுவதற்கு எதற்கு இவ்வளவு மேக்கப் என இன்னொரு ரசிகர் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன்னுடைய பதிலை பதிவு செய்துள்ளார். முதலில் உங்கள் கண்களில் இருக்கும் கோளாறை கண்டறியுங்கள்.

நான் ஒன்றும் மேக்கப் போட வில்லை. அப்போ இது போன்ற விஷயங்களை பேச வேண்டுமென்றால் அழுக்காகவும் கிழிந்த உடையுடன் அமர்ந்து பேச வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.