Actress Kushboo Childhood Photo
Actress Kushboo Childhood Photo

குஷ்பு தன்னுடைய குழந்தைப் பருவ புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Actress Kushboo Childhood Photo : தமிழ் சினிமாவில் 1980, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ரூபாய் 1.30 கோடி மட்டுமல்லாமல் இன்னும் கொடுத்து உதவிய விஜய் – வெளிவராத உண்மைகள்.!

தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டிலிருந்து வரும் குஷ்பு அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய 13 வயது புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அப்போதே குஷ்பு தள தள என தக்காளி பழம் போல் இருப்பதாக ரசிகர்கள் கிண்டல் அடித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது குஷ்பு தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து உள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.