நடிகை குஷ்பூ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள இவர் தற்போதும் ஒரு சில படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

மேலும் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் பணியாற்றி வரும் இவர் சமீபத்தில் கடுமையான வைரஸ் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த குஷ்பு நேற்றைய தினம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த குஷ்பூ அத்துடன் சிறிது நாட்களுக்கு பயணங்களை தவிர்த்து ஓய்வில் இருக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இவரது பதிவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.