மூன்று பட குழுவினரும் மாறி மாறி வாழ்த்துக்கள் சொல்லி கொண்டுள்ளனர்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழ் சினிமாவில் இன்று மூன்று படங்கள் வெளியாகி உள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தாவும், அருள்நிதி நடிப்பில் டிமான்டி காலனி 2, மற்றும் சியான் விக்ரம் நடிப்பில் தங்கலான் என்ற மூன்று படங்கள் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் கீர்த்தி சுரேஷ், விக்ரம் சார் ,,பா ரஞ்சித் சார் என் அன்பிற்குரிய மாளவிகா மோகனன் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் தங்கலான் பட குழுவினருக்கு வாழ்த்துக்கள் சொல்லி உள்ளார்.மேலும் டிமான்டி காலனி 2 படத்திற்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதே மாதிரி டிமான்டி காலனி 2 பட குழுவினரும் ரகு தாத்தா வெற்றியடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் டிமான்டி காலனி 2 படத்தின் இயக்குனர் தங்கலான் படத்தின் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இப்படி மாறி மாறி மூன்று பட குழுவினரும் வாழ்த்து தெரிவித்துள்ளது ரசிகர்களை ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் உள்ளாக்கியுள்ளது.