Actress Kayal Anandhi Marriage

நடிகை கயல் ஆனந்தி ரகசியமாக திருமணம் முடிந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Actress Kayal Anandhi Marriage : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கயல் ஆனந்தி. இவர் 2012ம் ஆண்டு பஸ் ஸ்டாப் என்னும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின்னர் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பொறியாளன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆனந்தி.

அதுமட்டுமில்லாமல் பிரபுசாலமன் இயக்கத்தில் கயல் என்ற திரைப்படத்தின் மூலம் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக விளங்கினார் நடிகை கயல் ஆனந்தி.

இதனைத் தொடர்ந்து விசாரணை, சண்டிவீரன், திரிஷா இல்லனா நயன்தாரா, பரியேறும் பெருமாள், போன்ற வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார்.

ஆனால் திடீரென்று கயல் ஆனந்திக்கு சாக்ரடீஸ் என்பவருடன் ரகசிய திருமணம் நடைபெற்றுள்ளது.

இதனால் ஆனந்தியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.