கொரோனா வைரஸ் தொற்றால் மகனை இழந்த நடிகை கவிதா. கணவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Actress Kavitha Son Passes Away : தமிழ் சினிமாவில் கதாநாயகி முதல் அம்மா வேடம் வரை நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கவிதா. ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட இவர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி பின்னர் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த கவிதா தற்போது சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் நடிக்கிறார்.

இந்த கொரோனா வைரஸால் இவரது மகன் மற்றும் கணவன் என இருவரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். மகனின் உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களுக்கு, சச்சின் அறிவுறுத்தல்.

மேலும் தற்போது வரை அவருடைய கணவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கவிதாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

“MAHA” படத்தின் மீது வழக்கு.., நீதி மன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு..! | Simbu | Hansika | Latest News