Actress Jayanthi Admitted in Hospital
Actress Jayanthi Admitted in Hospital

பழம்பெரும் நடிகை ஜெயந்தி மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Actress Jayanthi Admitted in Hospital : தமிழ் சினிமாவில் எதிர்நீச்சல், இரு கோடுகள், பாமா விஜயம், வெள்ளிவிழா என பல படங்களில் நடித்திருப்பவர் ஜெயந்தி.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது வயது முதிர்வு காரணமாக படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு உள்ளார். 2018ஆம் ஆண்டு முதலே ஜெயந்தி ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வருகிறார்.

தனுஷ் இயக்க போகும் சரித்திர படம், டைட்டிலே மிரட்டுவது – நடிக்கப் போவது யார் யார் தெரியுமா?

இந்த நிலையில் தற்போது அவருக்கு திடீரென மூச்சுத் தணறல் ஏற்பட பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கொரானா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டதில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. வழக்கமாக ஏற்படும் சுவாச பிரச்சனை தான் எனவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மேலும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விடுவார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.