கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் பதிவு வைரலாகி வருகிறது.

தமிழில் சின்னத்திரை தொடர்களான முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமானவர் தர்ஷா குப்தா. அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்த இவர் தற்போது வெள்ளித்திரையிலும் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

மேலும் சோசியல் மீடியா பக்கங்களிலும் ஆர்வம் காட்டி வரும் தர்ஷா குப்தா எப்போதும் ரசிகர்களை கவரும் விதமாக பல விதமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு கவனம் பெற்று வருவார். ஆனால் சமீப காலமாக நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களுடன் இணைந்து தன்னம்பிக்கை ஊட்டும் வகையிலும் சில தத்துவங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் இம்முறை, மாடர்ன் டிரஸ்ஸில் ஸ்டைலாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு “உன் மதிப்பை முடிவு செய்ய வேண்டியது நீதான்.. உன்னை சுற்றி இருப்பவர்கள் அல்ல. என குறிப்பிட்டு பகிர்ந்து இருக்கிறார். இவரது இந்த லேட்டஸ்ட் தத்துவ பதிவு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.