விஜய் சேதுபதியுடன் கருப்பன் படத்தில் நடித்த நடிகை தன்யா ரவிச்சந்திரன் உடம்பை குறைத்து குச்சியாக இளைத்துள்ளார்.
Actress Dhanya Ravichandran Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வருடத்திற்கு பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
இவரது நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களில் ஒன்று தான் கருப்பன். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தன்யா ரவிச்சந்திரன். அச்சு அசலாக அப்படியே அந்த கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்து வந்தார்.
ஆனால் நிஜ வாழ்க்கையில் செம மாடலாக வலம் வந்து கொண்டிருக்கிறார் தன்யா ரவிச்சந்திரன்.
தற்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் தன்யா தன்னுடைய எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். இவர் ஒல்லியாக மாறியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி வருகிறது.