நடிகை தேவயானி மீண்டும் புது அவதாரம் எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தேவயானி. படங்களில் வாய்ப்பு குறைய தொடங்கியதும் சன் டிவியில் கோலங்கள் சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார்.
இந்த சீரியலுக்கு பிறகு அவர் வேறெந்த சீரியலிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் அதே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராசாத்தி என்ற சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. கோலங்கள் சீரியல் வெற்றி பெற்றதை போலவே இந்த சீரியலும் ஜெயிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.