Dheepa

அப்போ எனக்கு விருது இல்லையா என மேடையில் கண்கலங்கிய நடிகை தீபா.

Actress Deepa Emotional on Stage : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தீபா. கடைக்குட்டி சிங்கம், மகாமுனி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரை சீரியல்களில் தான் நடிகையாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்‌. ‌ கடைக்குட்டி சிங்கம் தீபாவளி நிகழ்ச்சிக்கு சென்ற இவர் தற்போது குக்கு வித் கோமாளி தீபாவாக மாறியுள்ளார். இவருடைய வெகுளித்தனமான பேச்சும் அனைவரிடமும் அன்பை காட்டும் குணமும் ரசிகர்களிடம் அவருக்கான இடத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் இவர் 6th விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் தன் நடித்து வரும் அன்புடன் குஷி சீரியலுக்காக விருது கிடைக்கும் என ஆவலோடு எதிர்பார்த்து உள்ளார். ஆனால் அவருக்கு விருது இல்லை என தெரிய அதை மேடையில் கண் கலங்கி அழுதுள்ளார். அடுத்த முறை இன்னும் நன்றாக நடித்து விருது வாங்குவேன் என மாறி புகைப்படத்தை இந்த மேடையில் காட்டுவேன் என தெரிவித்துள்ளார்.

தீபாவின் இந்தப் பேச்சு ரசிகர்களை கொஞ்சம் சோகம் அடைய செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.