
சம்பளத்தை கேட்ட நடிகைக்கு அடி உதை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவரது இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் வணங்கான். ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கன்னியாகுமரியில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் திடீரென சூர்யா இந்த படத்தில் இருந்து விலக தற்போது அவருக்கு பதிலாக அருண் விஜய் நடித்து வருகிறார்.

மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க இருந்த கீர்த்தி செட்டி இந்த படத்தில் இருந்து விலக அவருக்கு பதிலாக ரோஷினி பிரகாஷ் என்ற நடிகை நாயகியாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக கேரளாவில் இருந்து சில துணை நடிகைகள் வர வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூன்று நாள் இந்த படத்தில் நடிப்பதற்காக 22,600 ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளது.
ஆனால் சம்பளத்தை சரி வராது தராத நிலையில் அந்தத் துணை நடிகைகளில் ஒருவரான லிண்டா என்பவர் தங்களை அழைத்து வந்த ஜிதினிடம் சம்பளத்தை கேட்க ஜிதின் அந்த நடிகையை கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இதனால் நடிகை லிண்டா கன்னியாகுமரி காவல் நிலையத்தில் இந்த தாக்குதல் குறித்து புகார் அளிக்க போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வணங்கான் படப்பிடிப்பில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.