Actress Chaya Singh Dance
Actress Chaya Singh Dance

பிரபல டான்ஸ் மாஸ்டர் மீது மன்மதராசா பாட்டுக்கு டான்ஸ் ஆடியுள்ளார் சாயாசிங்.

Actress Chaya Singh Dance : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று திருடா திருடி.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் சாயா சிங். இவர்கள் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி செமையாக ஒர்க் அவுட் ஆகி இருக்கும்.

இதுவரை யாருமே குஷ்புவ இப்படி பார்த்து இருக்க மாட்டீங்க, அரிய புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த நடிகை – நீங்களே பாருங்க.!

மேலும் இப்படத்தில் இடம்பெற்றிருந்த ராசா ராசா மன்மத ராசா என்ற பாடல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அதிலும் தனுசும் சாயா சிங்கும் ஆடிய ஆட்டத்தை ரசிகர்களால் மறக்கவே முடியாது.

நடிகை சாயா சீரியல் நடிகரான கிருஷ்ணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தெய்வமகள் சீரியலில் நடித்து மிகவும் பிரபலமான இவர் தற்போது ரன் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் இந்த சீரியல் நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா நடித்து வந்த நிலையில் அவர் விலகிக் கொண்டதும் சாயாசிங் நடித்து வருகிறார்.

இணையத்தை கலக்கும் வாத்தி ரைட் டான்ஸ்.. ஆஹா கல்யாணம் பவி டீச்சர் ஆடும் ஆட்டத்தை பாருங்க.!

இந்த நிலையில் நடிகை சாயாசிங் தற்போது சிவசங்கர் மாஸ்டர் உடன் ராசா ராசா மன்மத ராசா பாடலுக்கு நடனமாடி அவரிடம் ஆசிர்வாதம் வாங்கியுள்ளார்.

அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்னதாக சாயாசிங் அன்னையர் தினத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் சிறு வயதுப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதேபோல் லாக் டவுன் தொடங்கியதும் இந்த லாக் டவுன் என்னை கொல்கிறதா? அல்லது வலிமையாக்குகின்றதா என எனக்கு சொல்லத் தெரியவில்லை எனவும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.