தாமிரபரணி பானுவின் மகள் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Actress Banu Daughter in Debut Movie : தமிழ் சினிமாவின் விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி என்ற படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பானு. இவருடைய இன்னொரு பெயர் முக்தா.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்த இவர் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார். தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார்.

இப்படியான செயலை நிறுத்த வேண்டும் : அஷ்வின் செம கடுப்பு

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர் பானு. தற்போது இவருடைய மகள் கியாரா சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளார். ‌‌ மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் உருவான மாமங்கம் படத்தை இயக்கிய எம் பத்மகுமார் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் முக்கியமான வேடத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க உள்ளார்.

Beast-ன் First Single குறித்து கசிந்த புதிய தகவல் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | Thalapathy Vijay

இந்த தகவலை பானுவே தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் பானுவின் மகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.