Actress Anushka Shetty Photos

மீண்டும் செம ஸ்லிம்மாக மாறிய அனுஷ்காவின் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Actress Anushka Shetty Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இவர் ஆர்யாவுடன் சேர்ந்து நடித்த இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டி அதன் பின்னர் அதை குறைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் பல பட வாய்ப்புகள் அவரின் கைவிட்டு சென்றது.

இருப்பினும் பாகுபலி 2 படத்தில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இவரை ஒல்லியாக காட்டுவதற்காகவே படக்குழு எக்ஸ்ட்ராவாக செலவு செய்தது.

இப்படியான நிலையில் தற்போது அனுஷ்கா தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அனுஷ்கா தமிழில் மீண்டும் அஜித் விஜய் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆசைப்பட்டு வருகின்றனர்.