Actress Anjali Clarify on COVID19

சமூக வலைதளங்களில் பரவி வந்த தகவலால் பதறிப்போய் விளக்கம் அளித்துள்ளார் நடிகை அஞ்சலி.

Actress Anjali Clarify on COVID19 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. அங்காடித் தெரு என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் அஞ்சலி கவனம் செலுத்தி வருகிறார். அதே சமயம் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவான ஒருவராக இருந்து வருகிறார்.

இப்படியான நிலையில் பத்திரிகைகளில் நடிகை அஞ்சலிக்கு கொரானா என தகவல் தீயாக பரவ தொடங்கியுள்ளது. இதனால் பதறிப்போன அஞ்சலி அதெல்லாம் இல்லை வதந்திகளை தயவுசெய்து நம்பாதீர்கள். நான் நலமுடன் தான் உள்ளேன் என விளக்கம் அளித்துள்ளார்.