Andrea
விஜயுடன் நடித்த பிறகு ஆண்ட்ரியா பேட்டி ஒன்றில் பேசிய தகவல்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் தற்போது அவரின் 64-வது படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு முக்கிய வில்லனாக விஜய் சேதுபதி, கைதி புகழ் அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மேலும் ஆண்ட்ரியாவும் விஜயை எதிர்க்கும் வேடத்தில் நடித்து வருகிறார் என தகவல்கள் வெளியாகி இருந்தன, இந்த நிலையில் இவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் நடித்து வரும் ரோல் குறித்து கேட்டதற்கு அதை பற்றி எதுவும் சொல்ல முடியாது என மழுப்பி விட்டார். மேலும் லோகேஷ் இயக்கத்தில் நடித்தது மகிழ்ச்சி, அவர் திறமையானவர் என கூறியுள்ளார்.

மேலும் விஜய் ஒரு சூப்பர் ஸ்டார், அவருடன் நடித்ததில் இருந்து நான் அவரின் ரசிகையாகி விட்டேன் எனவும் கூறியுள்ளார்.

ரசிகையாகி விட்டேன் என ஆண்ட்ரியா கூறியதை பார்த்த ரசிகர்கள் இப்போ நீங்களுமா… தளபதி கூட நடிச்சிட்டு அவர் ரசிகையாகாம இருக்க முடியுமா? என கமெண்ட் அடிக்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.