kutti radhika
இயற்கை திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் குட்டி ராதிகா. அதன்பின் அவர் சில திரைப்படங்களில் நடித்தாலும் அவர் பெரிதாக பேசப்படவில்லை. 2006ம் ஆண்டுக்கு பின் அவர் சினிமாவில் நடிக்கவில்லை.

Actres Kutti Radhika re entry in horror thriller – இந்நிலையில், இயக்குனர் நவரசன் இயக்கும் ஹாரர் திரில்லர் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிறது. ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்படுகிறது.

இப்படம் அருந்ததி, பாகமதி ஆகிய படங்களை போல் ஹாரர் திரில்லராக இருக்கும் என இயக்குனர் கூறியுள்ளார். இப்படத்திற்காக முதலில் அனுஷ்காவை தொடர்பு கொண்டேன். ஆனால் அவரால் நடிக்க முடியவில்லை. அதன்பின் குட்டி ராதிகாவை சந்தித்தேன். அவர் இரு திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். இருந்தாலும், கதையை கேளுங்கள் என வற்புறுத்தி இப்பட கதையை கூறினேன். கதை முழுவதையும் கேட்டு உடனே ஒப்புக்கொண்டார் என நவரசன் தெரிவித்தார்.