Yash Father

Actor Yash : திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரத் தொடங்கி விட்டால் அதோடு அவர்களது குடும்பமே நல்ல நிலைக்கு வந்து விடும், ஆனால் பிரபல நடிகரின் அப்பா இன்னமும் பஸ் ட்ரைவராகவே இருந்து வருகிறார்.

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் யாஷ். இவர் தற்போது KGF என்ற படகின் மூலம் தமிழிலும் அறிமுகமாகியுள்ளார்.

வரும் டிசம்பர் 21-ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை விஷாலின் பிலிம்ஸ் பேக்டரி நிறுவனம் தான் வெளியிட உள்ளது.

இந்த படத்தின் ஹீரோவான யாஷின் அப்பா தான் இன்று வரையும் பஸ் ட்ரைவராகவே இருந்து வருகிறார்.

இதனை யாஷ் சமீபத்தில் நடத்த KGF படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

இதனை குறித்து விஷால் யாஷ் பல கோடி சம்பளம் வாங்கினாலும் அவரது அப்பா இன்று வரையும் தன்னுடைய பணியை விடாமல் தொடர்வது ஆச்சரியம் அளிப்பதாக கூறியுள்ளார்.

யாஷ் இவ்வாறு கூறியது விஷாலுக்கு மட்டுமல்ல ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

Actor Yash

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.