78 குண்டுகள் முழங்க நடிகர் விவேக் அவர்களின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

Actor Vivekh Funeral : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக். இவர் நேற்று முன்தினம் கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் நேற்று திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். தற்போது விவேக் அவர்களின் இறுதி ஊர்வலம் தொடங்கி உள்ளது.

78 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. விவேக் அவர்களின் சமூக சேவைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.