Vishal Video

Vishal Video : விஷால் தன்னுடைய மக்கள் நல இயக்கத்தின் மூலமாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராவும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வருபவர் விஷால்.

இவர் சமீபத்தில் அரசியலும் இறங்கி ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து மக்கள் இயக்கம் ஒன்றை தொடங்கி அதன் மூலமாக தமிழக மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்ததும் உதவியும் வருகிறார்.

சமீபத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்காக இந்த அமைப்பில் மூலம் விஷாலின் தொண்டர்களும் ரசிகர்களும் உதவி வந்தனர்.

தற்போது அவர்களுக்கு தான் நன்றி கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ

தொடர்ந்து தமிழக மக்களுக்காக உதவி வரும் விஷாலுக்கும் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் மக்கள் மத்தியில் இருந்து பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.