செல்ல நாயின் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை நடிகர் விஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஷால். புரட்சித் தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இவரது நடிப்பில் அடுத்ததாக மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கு திரைக்கு வர இருக்கிறது. வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகி இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் விஷால் 34 திரைப்படத்தில் நடிகர் விஷால் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளும் தற்போது தொடங்கி இருக்கும் நிலையில் நடிகர் விஷால் தனது வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் தனது நாயின் 14 வது பிறந்த நாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த நடிகர் விஷால் “என் மகனுக்கு 14வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், லவ் யூ டு தி மூன் & பேக், ஜிபி” எனக் குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். அதற்கு ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.