விஷால் போட்ட ட்விட்டர் பதிவுக்கு ரிப்ளை கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். புரட்சித் தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் நடிகர் சங்க செயலாளர் ஆகவும் பணியாற்றி வருகிறார். மேலும் தேவி அறக்கட்டளையின் மூலமாக பல ஏழை எளிய மக்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் உதவி வருகிறார்.

விஷால் போட்ட ட்விட்டர் பதிவு.. ரிப்ளை கொடுத்த பிரதமர் மோடி, விஷயம் என்ன? வைரலாகும் பதிவுகள்.!!

தற்போது நடிகர் விஷால் சமீபத்தில் காசிக்கு பயணம் மேற்கொண்டு இருந்தது பற்றியும் அங்கிருந்து சுற்றுச்சூழல் குறித்தும் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். முன்பை காட்டிலும் தற்போது காசி மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் கோவில் புனரமைக்கப்பட்டுள்ள விதம் நன்றாக இருப்பதாக விஷால் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாற்றத்திற்கு காரணமாக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

விஷால் போட்ட ட்விட்டர் பதிவு.. ரிப்ளை கொடுத்த பிரதமர் மோடி, விஷயம் என்ன? வைரலாகும் பதிவுகள்.!!

நடிகர் விஷாலின் இந்த பதிவை பார்த்த பிரதமர் நரேந்திர மோடி காசியில் நீங்கள் சிறந்த அனுபவத்தை பெற்றதற்காக மகிழ்ச்சியடைகிறேன் என ரிப்ளை செய்துள்ளார். இவர்களுடைய இந்த ட்விட்டர் கலந்துரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.