விஷாலுக்கு எதிராக அதாவது வில்லனாக நடிக்க முன்னணி நடிகர் ஒருவர் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் விஷால். இவர் அடுத்ததாக நோட்டா, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க நடிகர் ஆர்யா கமிட்டாகி இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
நிஜ வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்களான விஷாலும் ஆர்யாவும் அவன் இவன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
அந்த படத்திற்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.