நிம்மதியற்ற இரவுகள் கடந்து சென்று கொண்டிருக்கின்றன கேரளாவில் நடந்த துயர சம்பவம் எல்லோருடைய மனதிலும் மிகுந்த வலியை ஏற்படுத்தி உள்ள நிலையில். நாம் ஒவ்வொரு நாட்களையும் கடப்பது என்பது மிகுந்த மன வேதனையுடன் கடந்து சென்று கொண்டிருக்கிறோம்.
இயற்கை முன் மனிதர்கள் எதுவும் செய்ய முடியாது என்றாலும் கூட இந்த துன்பமான நிகழ்வை மனது ஏற்க மறுக்கிறது.
சாதி மத பேதமின்றி இந்நிகழ்வில் அனைவரும் கைகோர்த்து தங்கள் வாழ்வாதாரத்தை உறவினர்களை தங்களுடைய இருப்பிடத்தை இழந்து நிற்கதியாய் நிற்கும் அந்த மக்களுக்கு நாம் ஒன்றிணைந்து உதவி செய்வோம்.
இந்த துன்பமான நிகழ்வில் தங்களுடைய உயிரை துச்சம் என நினைத்து மக்களைக் காக்க போராடிவரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
இந்நிகழ்வினை வீண் அரசியல் ஆக்காமல் மக்களுக்கு உதவிடும் வகையில் ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை தீட்டுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.
விஷால் பேசிய இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது
உங்களவன்
விஷால்