Vimal

Actor Vimal : குடி போதையில் நடந்த விபரீதத்தால் பிரபல நடிகரான விமல் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் விமல். இவர் சமீபத்தில் சென்னை விருகம்பாக்கத்தில் குடி போதையில் அபிஷேக் என்ற நடிகரை தாக்கியதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இதனையடுத்து தற்போது விமல் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் விமல் போலீசாருக்கு பயந்து தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமல் நடிப்பில் தமிழில் களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மன்னார் வகையறா என பல படங்களில் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.