Actor Vimal in Chithi Serial

சன் டிவி சூப்பர் ஹிட் சீரியலில் நடிகர் விமல் நடித்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Actor Vimal in Chithi Serial : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் விமல். களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இறுதியாக இவரது நடிப்பில் களவாணி2 என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் விமல் சன் டிவியில் ராதிகா நடிப்பில் ஒளிபரப்பான சித்தி சீரியலில் நடித்து உள்ளார்.

இந்த சீரியலில் விமல் நடித்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சித்தி சீரியல் விமல் நடித்துள்ளாரா? இது வரைக்கும் இதை நோட் பண்ணதே இல்ல என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.