தங்கலான் பட குழுவினர் தண்ணீரில் குஷியாக ஆட்டம் போட்ட வீடியோ வைரல்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக விளங்கி வருபவர் சியான் விக்ரம். டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ள இவரது நடிப்பில் வெளியாகும் பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வெற்றியை பெற்றுள்ளன. சியான் விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான மகான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள தங்கலான் திரைப்படம் வெளியாக உள்ளது.

தண்ணீரில் குஷியாக ஆட்டம் போட்ட தங்கலான் படக்குழு!!… வைரல் வீடியோ இதோ!.

பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இந்த திரைப்படம் கேஜிஎப் படத்தில் இடம்பெறும் மனிதர்களின் வாழ்க்கையை பற்றியதாக இருக்கும் என இயக்குனர் பா ரஞ்சித் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். தற்போது படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் பிஸியாக நடைபெற்று வருகிறது.

தண்ணீரில் குஷியாக ஆட்டம் போட்ட தங்கலான் படக்குழு!!… வைரல் வீடியோ இதோ!.

இந்நிலையில் நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் “இன்று ஒகேனக்கல் அருகில் தங்கலான் படப்பிடிப்பு நடைபெற்றது என குறிப்பிட்டு படக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்பு முடிந்ததும் தண்ணீரில் குதித்து குஷியாக ஆட்டம் போட்டுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்த தருணத்தையும் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.