நடிகர் விக்ரம் ட்விட்டர் போஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விக்ரம். ரசிகர்களால் அன்போடு சியான் விக்ரம் என்று அழைக்கப்பட்டு வரும் இவர் கடந்த ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.

ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து இணையதளத்தில் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்து வரும் நிலையில் நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தங்கலான் ஹேஷ்டேக்குடன் பகிர்ந்திருக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்தின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து டிரெண்டிங்காகி வருகிறது.