Actor Vikram Explain on False News
Actor Vikram Explain on False News

சினிமாவை விட்டு விக்ரம் விலகப் போவதாக வெளியான தகவலுக்கு அவரது தரப்பில் இருந்து விளக்கம் கிடைத்துள்ளது.

Actor Vikram Explain on False News : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். ஒவ்வொரு படத்திற்கும் ஏற்றார் போல தன்னுடைய உடலை மாற்றிக் கொள்வதில் வல்லவர்.

அப்படியான இவர் கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் ஹிட் கொடுக்க முடியாமல் தவித்து வருவதாலும் தன்னுடைய மகன் விக்ரமை சினிமாவில் பெரிய நடிகராக்க வேண்டும் என்பதாலும் விக்ரம் நடிப்பதை நிறுத்தி விடப் போவதாக சில தினங்களுக்கு முன்பு சில பத்திரிகைகள் செய்தியை வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில் தற்போது விக்ரம் தரப்பிலிருந்து இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் முற்றிலும் வதந்தி, பொய்யானது என கூறியுள்ளனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்ட தயாராகும் ஹன்சிகா – விட்ட இடத்தை பிடிக்க தான் இப்படி ஒரு பிளான்.!

மேலும் சியான் விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்திலும் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் அதன்பிறகு செவன் ஸ்கிரீன் லலித் குமார் தயாரிப்பில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் எனவும் அதில் கூறியுள்ளனர்.

தயவு செய்து இப்படி பொய்யான தகவலை பரப்பாதீர்கள் எனவும் விக்ரம் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.