மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க இருக்கும் விஜயின் அதிகாரபூர்வமான அறிவிப்பு வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படம் தொடர்பான அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இதற்கிடையில் நடிகர் விஜய் 10, 12 வகுப்பு மாணவர்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை நேரில் சந்தித்து கௌரவப்படுத்த இருக்கும் அதிகாரபூர்வமான அறிவிப்பு வைரலாகி வருகிறது. அதில், சென்னையில் உள்ள RK Convention centre-ல் 10 &12 பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை நடிகர் விஜய் நேரில் வழங்கி கௌரவப்படுத்த இருக்கிறார். மேலும் +2-வில் 600 க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு ஸ்பெஷலான பரிசும் வழங்க இருக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வமான அழைப்பிதழ் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.