நெடுநாளைக்கு பின் நடிகர் விஜய் டிவிட்டரில் இட்ட பதிவு அவரின் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜயின் பிகில் திரைப்படம் வருகிற 25ம் தேதி வெளியாகவுள்ளது. விஜய் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். படம் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே இடையே உள்ள நிலையில், சமூக வலைத்தளமான டிவிட்டரில் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து பிகில் திரைப்படங்கள் தொடர்பான ஹேஷ்டேக்குகளை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

Sridhar Dance Master Talk About Vijay

இன்று காலையிலிருந்து #PodraVediya #BigilonTicketNew #வெறித்தனம் உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் டிவிட்டரின் முதல் 3 இடங்களில் முறையே டிரெண்டிங்கில் இருக்கிறது. மேலும், பிகில் விஜய் லுக்கில் சில எமோஜுகளும் உருவாக்கப்பட்டுள்ளது. அதை விஜய் ரசிகர்கள் நேற்று முதலே டிவிட்டரில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் #Bigil எனக்குறிப்பிட்டு அந்த எமோஜை பயன்படுத்தி ஒரு டிவிட் செய்திருந்தார். இதைக்கண்ட விஜய் ரசிகர்கள் ‘தலைவா’ என கதறி வருகின்றனர்.