Vijay Sethupathi helped Producer, Sindhubaadh, Anjali, Yuvan shankar Raja,Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

லாபம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதி செய்த உதவி அவரை பலரும் பாராட்டு வகையில் அமைந்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது லாபம் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயற்கை, ஈ, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜனநாதன் இயக்கி வருகிறார். இப்படத்தை விஜய் சேதுபதியே தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை குன்றத்தூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்காக விவசாயிகள் சங்க கட்டிடம் ஒன்றை நிஜமாகவே கட்டி அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அந்த கட்டிடத்தை அந்த கிராம மக்களுக்கு விஜய் சேதுபதி கொடுத்து விட்டார். விஜய் சேதுபதியின் தாராள மனசைக் கண்டு அந்த கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.