இயக்குனர் எஸ் ஏ.சந்திரசேகர் அவர்கள் பாரதிராஜா குறித்து பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத மாபெரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் முன்புறமாக நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜயின் தந்தையும் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் திகழும் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் விஜய்க்கு வாய்ப்பு தர மறுத்த இயக்குனர் பாரதிராஜா குறித்து பகிர்ந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

அதாவது தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எஸ்ஏ.சந்திரசேகர் அவர்கள் அப்போது மேடையில், இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்ற ஆசைப்பட்டேன் ஆனால் அவர் என்னை மறுத்து விட்டார் என்றும் எனது மகன் விஜயை நடிகனாக அறிமுகப்படுத்த அவரிடம் கேட்டபோது நீயே ஒரு இயக்குனர்தான் நீயே வாய்ப்பு கொடுக்கலாமே எனக்கூறி மறுப்பு தெரிவித்ததாக பழைய நினைவுகளை நினைவூட்டும் விதமாக கூறியிருக்கிறார். இவரது இந்த தகவல் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.