தளபதி விஜய் குறித்து அவரது தாய் ஷோபா அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படம் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில் நடிகர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகரர் அளித்திருக்கும் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் குறித்து… தாய் ஷோபா அளித்துள்ள பேட்டி வைரல்.!

அதாவது விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகரர் காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அப்போது விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அது பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது, விஜய் அரசியலுக்கு வருவது கடவுளுக்கு மட்டும்தான் தெரியும் அதற்கான முடிவு விஜய்யிடம் மட்டும் தான் உள்ளது என்றும் வாரிசு திரைப்படம் வெற்றி பெற அனைவரும் இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருக்கிறார்.