தேசிய அளவில் வெளியான மிகவும் பிரபலமான நடிகரின் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்திருக்கும் நடிகர் விஜய் குறித்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

கோலிவுட் திரை உலகில் ரசிகர்களால் அன்போடு இளைய தளபதி என்று அழைக்கப்பட்டு வரும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் மும்பரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க யோகி பாபு, சரத்குமார், பிரபு, குஷ்பூ, சங்கீதா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தேசிய அளவில் முதல் இடத்தை தக்க வைத்திருக்கும் தளபதி விஜய்!!… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!.

இந்நிலையில் நடிகர் விஜய் ஆர்மேக்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆர்மேக்ஸ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய அளவில் மிகப் பிரபலமான நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாதம்தோறும் வெளியாகும் இப்படியலில் விஜய் தற்போது வரை முதலிடத்தை தக்க வைத்திருக்கிறார். இந்த தகவல் விஜய் ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது.