robo shankar

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா கால்பந்து வீராங்கணையாக நடித்திருந்தார். அவரை விஜய் ‘குண்டம்மா..குண்டாம்மா’ என திட்டிக் கொண்டே இருப்பார். படத்தின் இறுதிகாட்சியில் ’நீ தின்னுவதற்கு மட்டும்தான் லாயக்கி..’ என விஜய் பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. விஜய் போன்ற ஒரு நடிகர் உருவ கேலி செய்வது போல் நடிப்பதாக என இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், இதுபற்றி பேட்டியளித்த இந்திரஜா ‘உண்மையில், என்னை அப்படி அழைக்க விஜய் மிகவும் தயங்கினார். ஆனால், காட்சிக்கு அது தேவை என்பதால் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காமல் நான் சந்தோஷமாகவே நடித்தேன். அந்த காட்சி எடுக்கப்பட்டவுடன் அப்படி பேசியதற்காக விஜய் சார் என்னிடம் பலமுறை மன்னிப்பு கேட்டார்’ என அப்பேட்டியில் இந்திரஜா கூறியுள்ளார்.