venu yadhav
பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Actor venu madhav passed away – மிமிக்ரி கலைஞராக இருந்து தெலுங்கு சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வேணு மாதவ். 1996ம் ஆண்டு வெளியான சம்பிரதாயம் என்கிற படத்தில் அறிமுகமான அவர் இதுவரை 170 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தமிழில் என்னவளே, காதல் சுகமானது ஆகிய படங்களில் நடித்தார்.

தல பேரை சொன்னாலே சும்மா அதிருதில்ல.. வியந்து போன நடிகை (வீடியோ)

கடந்த 3 வருடங்களாக கல்லீரல் பிரச்சனை காரணமாக அவர் அவதிப்பட்டு வந்தார். கடந்த 2 வாரங்களாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மதியம் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு தெலுங்கு சினிமா ரசிகர்களும், தெலுங்கு திரையுலகமும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.