வடிவேலுவுடன் இணைந்து நடித்த வெங்கல்ராவ் கை கால் செயலிழந்து அவதிப்பட்டு வருகிறார்.
தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்புவானாக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவருடன் திரைப்படங்களில் இணைந்து பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
அப்படியான நடிகர்களின் ஒருவர் தான் ஆந்திராவை சேர்ந்த வெங்கல் ராவ்.வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த நடிகரான இந்த வெங்கல் ராவ், ஒரு கை, ஒரு கால் செயல் இழந்து, தனது சொந்த ஊரான விஜயவாடாவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தகவல் இணையத்தில் வைரலாகி வர பலரும் வெங்கல் ராவ் கூடிய விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.