Actor Udhaya Reduced His Salary
Actor Udhaya Reduced His Salary

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நடிகர் உதயா தன்னுடைய சம்பளத்தில் இருந்து 40% குறைத்துக் கொண்டுள்ளார்.

Actor Udhaya Reduced His Salary : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தற்போது இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது.

இதனால் இந்தியா முழுவதும் முடக்கப்பட்டு இருப்பதால் பல துறைகள் முடங்கியுள்ளன. இதன் காரணமாக பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவிற்கு ரூபாய் ஆயிரம் கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

ஊரடங்கு முடிவதற்குள் இப்படி ஆயிடும் போல.. 70 வயது கிழவனாக மாறிய‌ இளம் தமிழ் நடிகர் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

இதன் காரணமாக விஜய் ஆண்டனி, விஷ்ணு விஷால், இயக்குனர் ஹரி, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் தங்களது சம்பளத்தில் ஒரு பகுதியை குறைத்துக் கொள்வதாக அறிவித்து இருந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர் உதயா தான் நடித்து வரும் அக்னி நட்சத்திரம், மாநாடு மற்றும் ஒப்பந்தமாகி உள்ள படங்களுக்கான சம்பளத்தில் 40 சதவீதத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

உதயாவின் இந்த அறிவிப்பிற்கு தயாரிப்பாளர்கள் பலரும் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.