Vishal Vs Udhaya
நடிகர் சங்கத்தை ஆட்டிப்படைத்து அதிர விட்டு வருவது நடிகரும் தயாரிப்பாளருமான உதயா தான் என பேசப்பட்டு வருகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கம் ராதா ரவி, சரத்குமார் தலைமையில் செயல்பட்ட போது பல்வேறு ஊழல்கள் நடந்திருப்பதாகவும் அதனை சரி செய்ய விரும்புவதாகவும் கூறி தேர்தலில் வெற்றி கண்டனர் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ள பாண்டவர் அணி.

ஆரம்பத்தில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தன்னுடைய அப்பாவை எதிர்த்து விஷாலுக்கு ஆதரவு கொடுத்தார் நடிகரும் தயாரிப்பாளருமான உதயா. விஷாலுக்காக அவர் பல முக்கிய பிரபலங்களிடம் இருந்து நிதியுதவி பெற்று தந்ததாகவும் கூறப்பட்டு வந்தது. இப்படியான நிலையில் விஷாலின் நடவடிக்கைகள் சரியில்லை, சிறிய படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

அதன் பின்னர் உதயாவின் உத்தரவு மகா ராஜா படம் ரிலீஸின் போது இந்த பிரச்சனை இன்னும் பூதகரமானது, விஷால் அணியினர் உன்னுடைய படத்திற்காக இப்படி பேசுவதாக அவர் மீது குற்றம் சாட்ட இவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டது.

அதன் பின்னர் உதயா வரும் நடிகர் சங்க தேர்தலில் விஷாலை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட போவதாக அறிவித்து அதற்கான வேலைகளில் இறங்கினார். உதயாவிற்கு ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் பக்க பலமாக செயல்பட்டதாகவும் கூறப்பட்டு வந்தது.

உதயாவின் வெளியேற்றத்தை தொடர்ந்து குட்டி பதமினி, ஆயுட்கான், நடிகை சங்கீதா மட்டுமில்லாமல் இன்னும் பலர் விஷால் அணியில் இருந்து வெளியேறினர். உதயாவின் தொடர் தூண்டுதலின் பேரிலும் விஷாலின் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவும் ஐசரி கணேஷ், கே பாக்யராஜ், கே ராஜன் ஆகியோர் ஒரு கூட்டணி அமைத்து விஷாலுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினர், நடிகர் சங்கத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு தேர்தலும் நடந்து முடிந்தது.

ஆனால் இந்த தேர்தலிலும் பல குளறுபடிகள் நடந்திருப்பதாக பல நடிகர் நடிகைகள் குற்றம் சாட்டினர். ரஜினி உட்பட பல நடிகர்கள் எங்களுக்கு தபால் ஓட்டே வந்து சேரவில்லை எனவும் கூறியது சலசலப்பை அதிகப்படுத்தி இருந்தது.

சமீபத்தில் இந்த தேர்தல் செல்லாது, பல விதிமுறைகளை மீறி தேர்தல் நடந்திருப்பதாக நீதிமன்றம் இந்த தேர்தலை ரத்து செய்தது. மேலும் மூன்று மாதத்திற்கு மறு தேர்தலை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. இதனை விஷாலை எதிர்த்து போட்டி போட்டு ஐசரி கணேஷ் அணி மனப்பூர்வமாக ஏற்று கொண்டுள்ளது.

ஆனால் விஷாலின் பாண்டவர் அணி இந்த வழக்கை மேல்முறையீடு செய்யப்பட இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இதனால் இன்னும் 6 மாதங்களுக்கு வழக்கு நடக்கும். அப்படி ஒரு சூழல் உருவானால் நடிகர் சங்க கட்டிடம் கட்டவே முடியாது என கூறப்படுகிறது.

உதயா விஷாலுக்கு எதிராக கிளம்பிய போது சரியான முறையில் பேச்சு வார்த்தை நடத்தி தவறு யார் மீது என்பதை அறிந்து தீர்வு கண்டிருந்தால் இன்று இப்படியொரு பிரச்சனையே ஏற்பட்டு இருக்காது என முணுமுணுக்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

ம்ம்ம் நடிகர் சங்கத்துல இன்னும் என்னனென்ன நடக்க போகுதோ..

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.