நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் சர்தார் திரைப்படத் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ் திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதியான இன்று “சர்தார்” திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

சிறந்த படைப்பு என்றும் தோற்காது!!… தம்பிக்கு மோட்டிவேஷனலான பதிவை வெளியிட்ட சூர்யா!.

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியாகி உள்ள இப்படத்தில் நடிகர் கார்த்தி உடன் இணைந்து ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடை போட்டு வரும் இப்படம் குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் மோட்டிவேஷனலான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், “சிறந்த படைப்பு என்றும் தோற்பதில்லை படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதை பார்ப்பதில் மகிழ்ச்சி”. அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டிருக்கிறார். அது தற்பொழுது வைரலாகி வருகிறது.