Actor Suriya Upcoming Movie Update
Actor Suriya Upcoming Movie Update

நான்காவது முறையாக ஹிட் கொடுத்த இயக்குனருடன் சூர்யா இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Suriya Upcoming Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவனது நடிப்பில் தற்போது சூரரைப்போற்று திரைப்படம் உருவாகி உள்ளது.

ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ரிலீசாகாமல் தள்ளிப் போய்விட்டது.‌ மேலும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

சண்ட வேணாம்.. பேசி தீர்த்து விடுவோம் – சூர்யா பட பிரச்சனையில் பஞ்சாயத்துக்கு வந்த தமிழக அரசு.!

இந்த இரண்டு படங்களையும் தொடர்ந்து சூர்யா கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா அயன் படத்தில் முதல்முறையாக நடித்திருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்து.

இதனை அடுத்து சூர்யா மீண்டும் மாற்றான் படத்தில் கேவி ஆனந்த் இயக்கத்தில் நடித்தார். இப்படத்தில் சூர்யா ஒட்டி பிறந்த இரட்டையராக நடித்திருந்தார் ரசிகர்கள் மத்தியில் இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இவ்விரு படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சூர்யா கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் என்ற திரைப்படம் விவசாயத்தை மையமாகக் கொண்டு வெளியானது.

மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்த இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் சூர்யா தான் நடித்து வரும் படங்களை முடித்து விட்டு நான்காவது முறையாக கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தப் படத்தின் கதையும் விவசாயத்தை மையமாகக் கொண்டதாகவே இருக்கும் என கூறப்படுகிறது.