Actor Suriya Recover from COVID19

நடிகர் சூர்யா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

Actor Suriya Recover from COVID19 : தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

இப்படியான நிலையில் நடிகர் சூர்யா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ட்விட்டரில் அதிர்ச்சிகர தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதனால் சூர்யா விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். தற்போது சூர்யா கொரானா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு நலமுடன் இருப்பதாக நடிகர் கார்த்தி பதிவிட்டுள்ளார்.